'ராகுல் காந்தியின் தலைமையை ஏற்பவன் அல்ல'; மணிசங்கர் அய்யர் சர்ச்சை; காங்கிரஸ் தலைமையை விமர்சிக்கும் பாஜக..!
Mani Shankar Aiyar says he does not accept the leadership of Rahul Gandhi
கடந்த 2024-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜகவை வீழ்த்துவதற்க்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து INDI கூட்டணியை உருவாக்கின. அப்போது காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதனையடுத்து, பல்வேறு மாநிலங்களில் தொகுதி பங்கீட்டில் சில இழுபறி பிரச்சினை நீடித்தது. இந்நிலையில், நேற்று மூத்த காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் அய்யர் வெளியிட்டுள்ள கருத்து காங்கிரஸ் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மணிசங்கர் அய்யர், பலமுறை சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி வந்த நிலையில், கட்சியால் ஓரங்கட்டப்பட்டவர். இந்நிலையில் அவர் நேற்று அளித்துள்ள பேட்டியில்கூறியது தற்போது சர்ச்சை ஆகியுள்ளது.

அதாவது, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தான் ‘இந்தியா’ கூட்டணியின் உண்மையான தலைவர். ராகுல் காந்தி தலைமை பொறுப்பில் இருந்து விலகி மம்தா, ஸ்டாலின், அகிலேஷ் யாதவ் அல்லது தேஜஸ்வி யாதவ் போன்ற மாநில தலைவர்களுக்கு வழிவிட வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
அத்துடன், மம்தா பானர்ஜி போன்ற தலைவர்கள் இல்லை என்றால், ‘இந்தியா’ கூட்டணியின் அடையாளமே மறைந்துவிடும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும்,' நான் காந்தி, நேரு மற்றும் ராஜீவ் காந்தியின் கொள்கைகளை பின்பற்றுபவன்; ஆனால் ராகுல் காந்தியின் தலைமையை ஏற்பவன் அல்ல’ என்று தெரிவித்து இருந்தார். இக்கருத்தை காங்கிரஸ் மேலிடம் நிராகரித்துள்ள நிலையில், ராகுல் காந்தியின் தலைமை மீது கூட்டணிக்குள் நம்பிக்கையற்ற சூழல் நிலவுவதாக பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.
English Summary
Mani Shankar Aiyar says he does not accept the leadership of Rahul Gandhi