மஹாராஷ்டிரா முதலமைச்சர் வீட்டுக்கு முன்பு தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு: காரணம் என்ன..?
Man tries to set himself on fire in front of Maharashtra Chief Ministers house
மஹாராஷ்டிராவில் தெற்கு மும்பை நகரில் மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் வீடு அமைந்து உள்ளது. அந்த வீட்டுக்கு வெளியே சோலாப்பூரை சேர்ந்த அஜித் மைதகி என்ற 39 வயதுடைய நபர் இன்று திடீரென தீக்குளிக்க முயன்றுள்ளார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெட்ரோல் கேனுடன் வந்த அஜித் மைதகியை மும்பை போலீசார் உடனடியாக தடுத்து நிறுத்தியுள்ளார். இதனால் அசம்பாவிதம் தடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், தற்கொலை முயற்சியில் வந்த அவரையும் மீட்டுள்ளனர். பின்னர் மலபார் ஹில் காவல் நிலையத்திற்கு போலீசார் அவரை அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணையில், அவர் மீது வழக்கு ஒன்றும் பதிவானதால், அவருக்கு மாநில தலைமையகத்தில் வேலை ஒன்று முழுமையடையாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்துள்ளதாகவும், இதனால், அவர் தொடர்ந்து வருத்தத்தில் இருந்துள்ளதால், அவர் இறுதியில் தொடர்ந்தே இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. பின்னர் போலீசார் அவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.
English Summary
Man tries to set himself on fire in front of Maharashtra Chief Ministers house