உணவு உண்ணும் விடுதியில் வெடி விபத்து - ஒருவர் பலி; 7 பேர் படுகாயம்.! 
                                    
                                    
                                   man died and seven peoples injured for bomb explossion at hotel in himachal pradesh
 
                                 
                               
                                
                                      
                                            உணவு உண்ணும் விடுதியில் வெடி விபத்து - ஒருவர் பலி; 7 பேர் படுகாயம்.!
இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் உள்ள சிம்லாவில் மால் சாலை கீழே உள்ள மிடில் பஜாரில் அமைந்துள்ள ஹிமாச்சலி ரசோய் என்கிற உணவு உண்ணும் இடத்தில் 
நேற்று மாலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடிபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். ஏழு பேர் காயமடைந்தனர். 
மேலும், இந்த வெடி விபத்தால் நான்கு முதல் ஆறு கடைகள் சேதமடைந்துள்ளதுடன், சுற்றுவட்டாரத்தில் உள்ள பல வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தும், பல தூரத்திற்கு வெடி சத்தமும் கேட்டுள்ளது.

வெடிவிபத்து ஏற்பட்ட இடம் தீயணைப்பு நிலையம் மற்றும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சில மீட்டர் தொலைவிலேயே உள்ளதால், உடனடியாக மீட்புப்படையினர் விரைந்துச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தியதில், குண்டுவெடிப்புக்கு 20 நிமிடங்களுக்கு முன்பு எரிவாயு கசிவு ஏற்பட்டதாக புகார் அளித்ததாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, வெடி விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
                                     
                                 
                   
                       English Summary
                       man died and seven peoples injured for bomb explossion at hotel in himachal pradesh