மனைவியின் நிர்வாண படத்தை வாட்ஸ் அப் dp-யாக வைத்த கணவன் - கேரளாவில் பரபரப்பு.!!
man arrested for wife nude photo in whatsapp dp
கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூர் அருகே திருக்காக்கரை பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர், குடும்ப தகராறு காரணமாக தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில், அந்த வாலிபர், தனது வாட்ஸ் அப் செயலியில் காட்சி படமாக தன்னுடைய மனைவியின் நிர்வாண படத்தை வைத்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி, தனது கணவரின் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், அந்த வாலிபரின் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் போலீசார் மனைவியின் நிர்வாண படத்தை வாட்ஸ்-அப் காட்சி படமாக வைத்தது ஏன்? என்று அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த வாலிபர் தனது மனைவிக்கு மற்றொரு ஆணுடன் தொடர்பு உள்ளதாகவும், அந்த நபருடன் உடலில் ஆடைகள் இல்லாமல் நிர்வாணமாக வீடியோ கால் பேசியதை மறைந்திருந்து ரகசியமாக புகைப்படம் எடுத்ததாகவும், தனது மனைவி மீது உள்ள கோபத்தில் அதனையே தனது வாட்ஸ்-அப் காட்சிபடமாக வைத்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்தச் சம்பவம் எர்ணாகுளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
man arrested for wife nude photo in whatsapp dp