கடவுளை போன்றவர் மம்தா.! அவர் எப்போதும் தவறு செய்யமாட்டார் - வங்காள அமைச்சர் பேச்சால் சர்ச்சை.! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்காளத்தில் பள்ளி ஆசிரியர் நியமனம் செய்வதில் முறைகேடுகள் நடந்தது தொடர்பாக முன்னாள் கல்வி அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி உள்பட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பல தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில், நேற்று மேற்கு வங்க மாநிலத்தின் கார்டகா நகரில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் விவசாய அமைச்சர் சோபன்தேப் சட்டோபாத்தியாய் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது, 'கடவுளை போன்றவர் மம்தா பானர்ஜி. 

கடவுளுக்கு பூஜை செய்யும் பூசாரி கூட சிலசமயங்களில் திருடராகலாம். ஆனால் கடவுள் எப்போதும் தவறு செய்ய மாட்டார். ஏன், நான் கூட திருடராகலாம். ஆனால் மம்தா திருடராக மாட்டார்" என்று தெரிவித்துள்ளார். அமைச்சர் சட்டோபாத்தியாயின் இந்தப் பேச்சு, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் எம்.பி. பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சாரியா, "திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டதால் இதுபோல பேசிவருகின்றனர்" என்றுத் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mamtha is a god Minister Sopanthep Chattopathiai speach


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->