மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு...! கேரளாவில் காங்கிரஸ் மகுடம் சூடியதால் உற்சாகத்தில் பிரியங்கா காந்தி...! - நெகிழ்ச்சியில் நன்றி - Seithipunal
Seithipunal


கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி மக்களின் ஆதரவுடன் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றியை முன்னிட்டு, அந்த மாநில வாக்காளர்களுக்கு தனது நன்றியை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா மனமார வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ‘எக்ஸ்’ பதிவில் தெரிவித்திருப்பதாவது,"கேரளத்தின் அன்பான சகோதரர், சகோதரிகளே, எங்கள் மீது நீங்கள் காட்டியுள்ள அசைக்க முடியாத நம்பிக்கைக்கும் அளவிட முடியாத ஆதரவுக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகள்.

உங்கள் இந்த உறுதியான ஆதரவு, ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு ஒரு வழிகாட்டும் ஒளியாக திகழும்.உங்கள் ஒவ்வொருவருக்கும் வளமான எதிர்காலம் உருவாக வேண்டும் என்பதற்காக முயற்சியுடன் செயல்படுவோம்.

வரும் ஐந்து ஆண்டுகளில் ஒவ்வொரு நாளும் எங்கள் பணிகள் உங்கள் நம்பிக்கைக்கு உரிய பதிலாக இருக்கும்.வயநாடு பகுதியில் உள்ள ஏழு தொகுதிகளிலும் காங்கிரஸ் அணிக்கு நீங்கள் அளித்த வெற்றி எங்களுக்கு மிகப்பெரிய பொறுப்பை அளிக்கிறது.

என்னுடன் சேர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டு பிரதிநிதிகளும் வயநாட்டின் முழுமையான முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் உழைப்போம்".இவ்வாறு அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mahesan verdict verdict people Priyanka Gandhi excited Congress crowned Kerala Thank you resilience


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?


செய்திகள்



Seithipunal
--> -->