வாரிசு அரசியலால் உடைந்தது தேசியவாத காங்கிரஸ்! 29 எம்எல்ஏ.,க்கள் பாஜக கூட்டணியில் இணைவு!  - Seithipunal
Seithipunal


வாரிசு அரசியலால் மகராஷ்டிரா மாநிலத்தில் மேலும் ஒரு அரசியல் கட்சி உடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. சிவசேனாவை தொடர்ந்து சரத் பவார் தலைவராக இருக்கக்கூடிய தேசியவாத காங்கிரஸ் கட்சியும் வாரிசு அரசியலால் பிளவுபட்டுள்ளது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அஜித் பவார், தனது ஆதரவு எம்எல்ஏ.,க்கள் 28 பேருடன் இன்று பாஜக கூட்டணியில் இணைய உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆளுங்கட்சியாக இருந்த சிவசேனாவில், உத்தவ் தாக்ரேவின் குடும்ப அரசியல் மற்றும் வாரிசு அரசியல் காரணமாக, அக்கட்சியிலிருந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியினர் விலகி, பாஜக தலைமையில் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்துள்ளனர்.

இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், தனது மகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துவருவதாகவும், இது வாரிசு அரசியலுக்கு வழி வகுக்கும் என்று கூறி, அஜித் பவார் மற்றும் அவரின் ஆதரவு எம்எல்ஏக்கள் 28 பேர் இன்று பாஜக கூட்டணியில் இணைய உள்ளனர்.

மேலும், பாஜக கூட்டணியில் இணையும் 29 எம்எல்ஏக்களில், ஒன்பது பேருக்கு ஆளும் அரசில் அமைச்சர் பதவி வழங்க உள்ளதாகவும், மகாராஷ்டிரா மாநில பாஜக எம்எல்ஏ தமிழ்ச்செல்வன் தனியார் செய்தி ஊடகம் ஒன்றிற்கு தகவல் தெரிவித்துள்ளார். இன்று மாலையே இந்த பதிவியேற்பு விழா நடக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 

எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டத்திற்கான அறிவிப்பை அண்மையில் சரத் பவார் வெளியிட்டு இருந்த நிலையில், அவரின் கட்சியே உடைந்து இரண்டாக பிரியும் நிலைக்கு சென்றுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

maharastra NCP Ajith Bhawar


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->