சம்பவம்..! அக்காவை காதல் வலையில் வீழ்த்த முயற்சித்த இளைஞன்... கத்தியால் பதில் சொன்ன சின்னத்தம்பி.! - Seithipunal
Seithipunal


அக்காவை காதல் வலையில் வீழ்த்த திட்டமிட்ட இளைஞரை, பெண்ணின் தம்பி நண்பர்களுடன் சேர்ந்து கொலை முயற்சி செய்த சம்பவம் நடந்துள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத் தரங்கன் நகர் பகுதியை சார்ந்தவர் பண்டிட் (வயது 20). இவன், இதே பகுதியில் வசித்து வந்த பெண்மணியை காதல் வலையில் வீழ்த்தும் எண்ணத்தோடு இருந்து வந்துள்ளான். 

மேலும், அந்த பெண்மணி அவ்வப்போது வந்து செல்லும் நேரங்களில், பண்டிட் சென்று முன்னதாகவே காத்திருப்பது, பிறரை பேசுவது போல பெண்ணை புகழ்ந்து தள்ளுவது என காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளான். இந்த விஷயம் பெண்ணின் தம்பியான 15 வயது சிறுவனுக்கு தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து, சம்பவத்தன்று நேரடியாக பண்டிட்டின் வீட்டிற்கு சென்ற சிறுவன், பண்டிட்டை அழைத்து தனது அக்காவிற்கு காதல் வலை விடும் செயலை கைவிட கூறி தனது நண்பர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளான். இதனை ஏற்றுக்கொள்ளாத பண்டிட், அப்படித்தான் செய்வான். உன்னால் முடிந்ததை செய்துகொள் என்று கூறியுள்ளான். 

இதனைத்தொடர்ந்து ஆத்திரமடைந்த 15 வயது சிறுவன், தான் எடுத்துச்சென்ற கத்தியால் பண்டிட்டை சரமாரியாக குத்திவிட்டு தப்பி சென்றுள்ளான். பண்டிட்டின் அலறல் சத்தம் கேட்டு வந்த அவனது பெற்றோர், அவனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்துள்ளனர். 

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், 15 வயது சிறுவன் மற்றும் அவனது நண்பர்கள் இரண்டு பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சமப்வம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் அவுரங்காபாத் நகரில் தரங்கன் நகரில் வசிக்கும் பண்டிட் என்ற 20 வயது இளைஞர் அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணை அடிக்கடி சைட் அடித்து வந்துள்ளார் .அந்த பெண் வெளியே போகும்போதும், வரும் போதும் அந்த வாலிபர் அந்த பெண்ணை கிண்டல் செய்வதும் ,ஜாடை மாடையாக பேசுவதுமாக இருந்துள்ளார் .இந்த விஷயம் அந்த பெண்ணின் 15 வயதான சகோதரருக்கு தெரிய வந்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Maharashtra Brother Murder Attempt due to Youngster Attempt Love his Sister


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->