காதல்...லிவ்-இன்...கொலை...தற்கொலை...! முடிவுக்கு வந்த இளைய ஜோடியின் வாழ்க்கை...! - உறைய வைக்கும் பின்னணி என்ன...?
Love livein murder suicide life young couple that ended What chilling background
உத்தரபிரதேச மாநிலத்தின் மதுரா மாவட்டம் பிருந்தாவன் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் என்ற இளைஞரும், ராதிகா (28) என்ற இளம்பெண்ணும் காதல் உறவில் இணைந்திருந்தனர். இருவரும் துர்காபூர் பகுதியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து, திருமணமின்றி கணவன்-மனைவியைப் போல் ஒன்றாக வசித்து வந்தனர்.
ராதிகாவுக்கு முன்பே திருமணம் ஆனிருந்தாலும், கணவரை பிரிந்து சுபாஷுடன் வாழ்ந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.காலப்போக்கில் இருவருக்குமிடையில் கருத்து முரண்பாடுகள் தீவிரமடைந்து, கடந்த சில மாதங்களாக இடையறாத தகராறுகள் நிலவி வந்தன. இதனால் ராதிகா, சுபாஷை விட்டு பிரிந்து சென்றார்.

இருந்தபோதிலும், சுபாஷ் தொடர்ந்து அவரை தொந்தரவு செய்து வந்ததால், ராதிகா காவலர்களிடம் புகார் அளித்ததாக தெரிவிக்கப்படுகிறது. அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைப்பெற்று வந்தது.
இந்நிலையில், பிருந்தாவனில் தனியாக வசித்து வந்த ராதிகாவைச் சந்திக்க நேற்று அவரது வீட்டிற்கு சென்ற சுபாஷ், மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் கடுமையாக மாறிய தருணத்தில், ஆத்திரம் அடைந்த அவர் தன்னிடம் இருந்த கத்தியால் ராதிகாவை பலமுறை குத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த கொடூர தாக்குதலில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ராதிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதன் பின்னர், அதே வீட்டில் உள்ள அறைக்குள் சென்ற சுபாஷ் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று, இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த இரட்டை உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக காவலர்கள் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது. காதல் உறவில் ஏற்பட்ட விரிசல் இரு உயிர்களையும் பலிகொண்ட இந்த சம்பவம் அந்தப் பகுதியை அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது.
English Summary
Love livein murder suicide life young couple that ended What chilling background