அதிகரிக்கும் கெரோனா தொற்று.. உத்திரபிரதேச மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு.! - Seithipunal
Seithipunal


டெல்லி மகாராஷ்டிரா ஹரியானா உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் வரவிருக்கும் பண்டிகைகள் மற்றும் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு மே 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை உத்திரப்பிரதேச மாநிலம் கௌதமபுத்தர் நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பொது இடங்களில் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் ஒன்று கூடுவதற்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுகளின் போது பள்ளி மற்றும் கல்லூரிகளில் சமூக இடைவெளி பராமரிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் உயர் அதிகாரிகளின் அனுமதி இன்றி யாரும் போராட்டங்கள் அல்லது உண்ணாவிரத போராட்டங்கள் நடத்த கூடாது. வழிபாட்டுத் தலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதுடன் பொது இடங்களில் பூஜைகள் நடத்த அனுமதிக்கப் படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lockdown for uttar Pradesh gowthama putha district


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->