கிறிஸ்துமஸ் எதிரொலி - மூன்று நாட்களில் ரூ.154 கோடிக்கு மதுபானம் விற்பனை.! - Seithipunal
Seithipunal


நமது அண்டை மாநிலமான கேரளாவில் ஒவ்வொரு ஆண்டும் ஓணம், கிறிஸ்துமஸ், புத்தாண்டு உட்பட பண்டிகை நாட்களில் மது விற்பனை அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டின் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மது விற்பனை அமோகமாக நடைபெற்றுள்ளது.

இது குறித்து கேரள மதுபான கழகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- "கேரளா முழுவதும் மதுபான சில்லறை கடைகள் மூலம் கிறிஸ்துமசுக்கு முந்தைய 3 தினங்களில் (22,23,24) ரூ.154 கோடியே 78 லட்சத்திற்கு மது விற்பனை செய்யப்பட்டு உள்ளது. 

கடந்த ஆண்டு ரூ.144 கோடியே 91 லட்சத்திற்கு விற்பனையாகி இருந்தது. இந்த ஆண்டு 22, 23 ஆகிய 2 நாட்களில் ரூ.80 கோடியே 4 லட்சத்திற்கும், 24-ந் தேதி ரூ.70 கோடியே 74 லட்சத்திற்கும் மதுபானங்கள் விற்பனையாகி இருக்கிறது. 

சில்லறை விற்பனை கடைகளில் அதிகபட்சமாக, சாலக்குடியில் உள்ள ஒரு கடையில் மட்டும் ரூ.63 லட்சத்து 85 ஆயிரத்திற்கு மது விற்பனை செய்யப்பட்டு உள்ளது" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

liquar sale 154 crores in kerala


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->