வெறும் மளிகை பொருட்களுக்காக ஒரு உயிர் பறிபோனதா...? - நண்பனையே கொன்ற நபர் ...!
life lost just groceries person who killed his own friend
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 30 வயதுடைய அருண் சானிக், திருப்பூர் மாவட்டம் வாவிபாளையம் பகுதியில் தங்கி, அங்குள்ள பனியன் பேக்கேஜிங் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். அவருடன் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 50 வயதுடைய பிரசன்னாவும் அதே இடத்தில் தங்கி, ஒரே நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

கடந்த 20-ஆம் தேதி இரவு, சமையலுக்கான பொருட்கள் வாங்குவது தொடர்பாக இருவருக்கும் இடையே சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனால், அந்த சாதாரண கருத்து வேறுபாடு திடீரென கடும் மோதலாக மாறியது. ஆத்திரம் அடைந்த பிரசன்னா, அருகில் இருந்த இரும்புக் கம்பியைப் பயன்படுத்தி அருண் சானிக்கை கண்மூடித்தனமாக தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதலில் கடுமையாக காயமடைந்த அருண் சானிக்கை அக்கம் பக்கத்தினர் அவசரமாக மீட்டு, அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றி அனுமதிக்கப்பட்டார்.
ஆனால், மருத்துவர்களின் தீவிர சிகிச்சையும் பலனளிக்காமல், அருண் சானிக் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து, திருமுருகன்பூண்டி காவலர்கள் கொலை வழக்குப் பதிவு செய்து, சம்பவத்திற்குப் பின்னர் தலைமறைவாகியுள்ள பிரசன்னாவை தீவிரமாக தேடி வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.
திருப்பூரில் வெளிமாநில தொழிலாளி ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்த இந்த சம்பவம், அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
life lost just groceries person who killed his own friend