சட்டமன்ற இடைத்தேர்தல்;  வாக்கு சதவீத நிலவரம் வெளியீடு! - Seithipunal
Seithipunal


இன்று நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் நிலாம்பூர் தொகுதியில் அதிக அளவாக 70.76 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

குஜராத்தின் விஸ்வதார் மற்றும் காடி ஆகிய 2 தொகுதிகளுக்கும், கேரளாவின் நிலாம்பூர், மேற்கு வங்காளத்தின் காளிகஞ்ச், பஞ்சாபின் லூதியானா மேற்கு ஆகிய 3 தொகுதிகளுக்கும் என மொத்தம் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் இன்று நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.அந்த 5 தொகுதிகளிலும் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டநிலையில் நேற்று முன் தினம் மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது.

இந்த நிலையில் குஜராத், கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் பஞ்சாப் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 5 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்றது.இதன்படி,  இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடந்தது.இன்று மாலை 6 மணியளவில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. ஒரு சில மையங்களை தவிர, அனைத்து தொகுதிகளிலும் உள்ள வாக்கு சாவடி மையங்களில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது.

இன்று பதிவாகும் வாக்குகள் வரும் 23-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், மாலை 5 மணி வரை பதிவான வாக்கு சதவீத விவரம் வெளிவந்து உள்ளது. இதில், மேற்கு வங்காளத்தின் காளிகஞ்ச் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் 69.85 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோன்று, நிலாம்பூர் தொகுதியில் அதிக அளவாக 70.76 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. குஜராத்தின் விஸ்வதார் மற்றும் காடி ஆகிய 2 தொகுதிகளில் முறையே 54.61 மற்றும் 54.49 சதவீத வாக்குகளும், பஞ்சாபின் லூதியானா மேற்கு தொகுதியில் 49.07 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Legislative Assembly by-election voter turnout percentage report released


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->