பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: கூடுதல் குற்றப்பத்திரிகையில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தலைவர் சேர்ப்பு..! - Seithipunal
Seithipunal


பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான கூடுதல் குற்றப்பத்திரிகையில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் 22-ஆம் தேதி, ஜம்மு காஷ்மீரின் சுற்றுலாத்தலமான பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 25 சுற்றுலாப் பயணிகளும், ஓர் உள்ளூர் நபரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  இந்தச் சம்பவம் நாட்டை உலுக்கிய நிலையில், இது தொடர்பாக பஹல்காம் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. 

ஆரம்பகட்ட விசாரணைகளுக்குப் பிறகு இந்த வழக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தால் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வசம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்து வரும் என்ஐஏ, 1,597 பக்கங்கள் கொண்ட முதன்மை குற்றப்பத்திரிகையை ஏற்கெனவே தாக்கல் செய்துள்ளது. இதில், பாகிஸ்தானைச் சேர்ந்த சஜித் ஜாட், ஜூலை 2025-இல் நடத்தப்பட்ட 'ஆபரேஷன் மகாதேவ்' நடவடிக்கையின் போது பாதுகாப்புப் படையினரால் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில், தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள கூடுதல் குற்றப்பத்திரிகையில், லஷ்கர்-இ-தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

ஜம்முவில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த கூடுதல் குற்றப்பத்திரிகையில், பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஹபீஸ் சயீத்தின் பெயர், தனிப்பட்ட முறையிலும், தடை செய்யப்பட்ட 'லஷ்கர்-இ-தொய்பா' மற்றும் அதன் பினாமி அமைப்பான 'தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரன்ட்' ஆகியவற்றின் தலைவர் என்ற முறையிலும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளது. 'பாரதிய நியாய சன்ஹிதா' மற்றம் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Lashkar e Taiba leader added to additional chargesheet in Pahalgam terror attack case


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->