விபத்தில் உயிரிழந்த அய்யப்ப பக்தர்களின் குடும்பத்துக்கு கேரளா முதல்வர் இரங்கல்.! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டியில் இருந்து சபரிமலைக்கு 11 பக்தர்களுடன் வந்த கார் குமுளி அருகே ஒரு பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ettu பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து சபரிமலைக்கு வந்த பக்தர்கள் விபத்தில் பலியான தகவலறிந்த கேரள மாநிலத்தின் முதலமைச்சர் பினராயி விஜயன் உடனடியாக சம்பவ இடத்திற்கு மீட்புபணிகளை முடுக்கிவிடும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

இதைத்தொடர்ந்து, அவர் விபத்தில் பலியான பக்தர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அவர் தெரிவித்திருப்பதாவது:- "சபரிமலைக்கு வந்த தமிழக பக்தர்கள் விபத்தில் பலியான தகவல் அறிந்ததும் மிகவும் மனம் வருந்தினேன். 

உறவினர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். இதுபோன்று கேரள தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணனும் பலியான பக்தர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kerala state chief minister condoles to accident died sabarimala devotes family


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->