பக்தர்களிடம் கூடுதல் வசூல் - உணவகங்களுக்கு செக் வைத்த கேரளா உயர்நீதிமன்றம்.!  - Seithipunal
Seithipunal


சபரிமலைக்கு வரும் பக்தர்களிடம் கூடுதல் பணம் வசூலிக்கும் உணவகங்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தருகின்றனர். அப்படி வரும் ஐயப்ப பக்தர்கள் அங்குள்ள உணவகங்களில் சாப்பிடும் போது, அவர்களிடம் கூடுதல் விலை வசூலிப்பதாக புகார்கள் எழுந்தது.

இந்தப் புகாரை கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் அணில் கே.நரேந்திரன், கிரிஷ் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு தாமாக முன்வந்து விசாரணை செய்தது. அந்த விசாரணையின் போது, "சபரிமலையில் மகர விளக்கு பூஜைக்கு வரும் பக்தர்களிடம் உணவகங்கள் கூடுதல் விலை வசூலிக்கக்கூடாது. 

இது தொடர்பாக எருமேலி, ராணி, பெருநாடு கிராம ஊராட்சிகள் விசாரித்து, சம்பந்தப்பட்ட உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசு சார்பில் பறக்கும் படை, உள்ளாட்சித்துறை, சுகாதாரத்துறை, திருவாங்கூர் தேவசம்போர்டு அதிகாரிகள் தொடர் சோதனை மேற்கொண்டு, பக்தர்களுக்கு நியாயமான விலையில் உணவு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kerala high court order dont take extra charge to sabarimalai devotees


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->