கேரளா | 22 ந்தேதி வரை கனமழை: பல மாவட்டங்களுக்கு ''ஆரஞ்சு - மஞ்சள் அலர்ட்''!
Kerala heavy rain warn
கேரள மாநிலத்தில் கடந்த மாதம் இறுதியில் தென்மேற்கு பருவ மழை தொடங்கி பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தென்மேற்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள புயல் சுழற்சி காரணமாக கேரளாவில் வருகின்ற 22ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய மாநில ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வருகின்ற 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் கேரள மாநிலத்தில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று எர்ணாகுளம், கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம், கோழிக்கோடு, கண்ணூர் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை மற்றும் நாளை மறுநாள் கண்ணூர் காசர்கோடு, இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர் ,பாலக்காடு , வயநாடு போன்ற மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் வருகின்ற 22 ஆம் தேதி ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, வயநாடு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.