வரலாற்றில் முதல் முறை... அரசு ஊழியர்களுக்கு தவணை முறையில் சம்பளம்: அதிர்ச்சியில் ஊழியர்கள்! - Seithipunal
Seithipunal


கேரளாவில் ஒவ்வொரு மாதமும் அரசு ஊழியர்களுக்கு முதல் இரண்டு நாட்களில் மாத ஊதியம் வழங்கப்படும். மாநிலத்தில் உள்ள 5.25 லட்சம் அரசு ஊழியர்களுக்கும் மாதம் தோறும் ரூ. 3,330 கோடி ஊதியமாக வழங்கப்படுகிறது. 

அந்த வகையில் பிப்ரவரி மாத சம்பளம் மாத தொடக்கத்தில் வரவு வைக்கப்படாததால் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து சம்பளம் வழங்காததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். 

இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க கேரளா அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி வரலாற்றில் முதல் முறையாக சம்பளம் தவணை முறையில் வழங்கப்பட்டது. 

முதல் கட்டமாக 50000க்கும் குறைவாக சம்பளம் உள்ளவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் கூடுதல் சம்பளம் பெறுபவர்கள் மீதமுள்ள தொகையை எப்போது வழங்கப்படும் என அறிவிக்கப்படவில்லை. 

நேற்று 97 ஆயிரம் பேருக்கு மட்டுமே சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. இன்று ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு முதல் தவணை சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. 

3 அல்லது 4 நாட்களில் சம்பள பகிர்வு முடிக்கப்படும் எனவும் மாநில நிதி மந்திரி தெரிவித்துள்ளார். மேலும் ஓய்வூதியம் வழங்குவதில் எந்த ஒரு தடையும் இருக்காது எனவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala government employees paid installments


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->