கேரளா முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர் கைது.!
kerala cm ex principal secretary sivasangar arrested for bribe
நமது அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் ஏற்பட்டபோது முதலமைச்சர் பினராய் விஜயனின் முதன்மை செயலாளராக இருந்தவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கர்.
அந்த சமயத்தில், தங்கம் கடத்தபட்ட சம்பவம் நடந்ததால் இந்த சம்பவத்தில் முதன்மை செயலாளரான சிவசங்கருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதனால், அவர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து, அவருக்கு கடந்த ஆண்டு மீண்டும் பணி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் கடந்த மாதம் 31-ந் தேதி பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
இதற்கிடையே தங்கம் கடத்தல் தொடர்பாக விசாரணை நடைபெற்ற போது கடத்தலில் முக்கிய பங்கு வகித்த சுவப்னா சுரேஷ், சிவசங்கர் மற்றும் இவர்களுடைய தணிக்கை அதிகாரி உள்ளிட்டோரின் பெயரில் இருந்த வங்கி லாக்கரில் அமலாக்க துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது சிவசங்கர் வாங்கி லாக்கரிலிருந்து ரூ.1 கோடி மீட்கப்பட்டது. இது தொடர்பாக அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த பணம் லைப் மிஷன் திட்டத்தின் மூலமாக சிவசங்கருக்கு கிடைத்த லஞ்சம் என்று சுவப்னா சுரேஷ் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கேரளாவில் மக்களுக்கு இலவச வீடு கட்டி கொடுக்கும் லைப் மிஷன் திட்டத்தில் முதன்மை செயலாளராக இருந்த சிவசங்கர் ரூ.1 கோடி லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. அதன் படி, அமலாக்க துறையினர் கடந்த மூன்று நாட்களாக கொச்சியில் சிவசங்கரிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அதன் பின்னர் நேற்று முன்தினம் இரவு அமலாக்க துறையினர் ஐ.ஏ.எஸ்.அதிகாரி சிவசங்கரை கைது செய்தனர். இதையடுத்து அவரை நேற்று எர்ணாகுளம் முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு, சிவசங்கரை 5 நாட்கள் விசாரணைக்காக அமலாக்க துறை காவலில் வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
English Summary
kerala cm ex principal secretary sivasangar arrested for bribe