கேரளாவில் விபத்தில் சிக்கிய மணமகள்... மருத்துவமனைக்குச் சென்று தாலி கட்டிய மணமகன்! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் தும்போலியைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை ஆவணி (25) என்பவருக்கும், பொறியியல் கல்லூரிப் பேராசிரியர் ஷாரோன் (32) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. நேற்று (வெள்ளிக்கிழமை) ஆலப்புழாவில் உள்ள ஒரு மண்டபத்தில் இவர்களின் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

விபத்து:

மணப்பெண் ஆவணி, ஒப்பனை செய்துகொள்வதற்காகத் தனது அத்தையுடன் காரில் அருகே உள்ள அழகு நிலையத்திற்குச் சென்றார். காரை ஆவணி ஓட்டிச் சென்றபோது, அது எதிர்பாராதவிதமாகத் தும்பொலி அருகே மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் ஆவணி மற்றும் அவரது அத்தை இருவரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக இருவரும் எர்ணாகுளம் அருகே உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

நெகிழ்ச்சியான நிகழ்வு:

விபத்து காரணமாகத் திருமணம் நின்றபோது, மணமகன் ஷாரோன் மருத்துவமனைக்குச் சென்று, சிகிச்சை பெற்று வந்த மணமகள் ஆவணிக்கு அங்கேயே தாலி கட்டினார்.

அதே சமயம், திருமணத்தில் கலந்துகொள்வதற்காக மண்டபத்துக்கு வந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அங்கிருந்தவர்கள் விருந்து உபசரித்தனர்.

மணமகன் ஷாரோன் விபத்தில் சிக்கிய மணமகளுக்குக் கவலையின்றி, மருத்துவமனைக்கே சென்று தாலி கட்டிய இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kerala bride Accident Hospital groom marriage


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->