மோடி பெயரை உச்சரித்தால் ''பட்டினி போடுங்கள்'' - பரபரப்பு கிளப்பிய கெஜ்ரிவால்!
Kejriwal appeals women voters
டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ. 1000 வழங்கப்படும் என அறிவித்தார்.
இதனை தொடர்ந்து டெல்லியில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் ஏராளமான கலந்து கொண்டனர். அப்போது பேசிய முதல் மந்திரி கெஜ்ரிவால்,
டெல்லி மக்களுக்கு ஆம் ஆத்மி நிறைய நலத்திட்டங்களை செய்கிறது. இது தொடர்பாக பெண்கள் தங்கள் குடும்பத்தாரிடம் எடுத்துச் சொல்லி ஆம் ஆத்மிக்கு ஆதரவு தர வேண்டும்.
பெண்களுக்கு அதிகாரம் தருவதாக ஏமாற்றுகிறார்கள். ஆனால் நாங்கள் இலவச மின்சாரம், இலவச பேருந்து, மாதம் ரூ. 1000 கொடுக்கிறோம்.

உங்கள் வீட்டு ஆண்கள் மோடி பெயரை உச்சரித்தால் கண்டியுங்கள். மோடிக்கு வாக்களிக்க வேண்டும் தெரிவித்தால் இரவு சாப்பாடு கொடுக்காதீர்கள். பட்டினி போடுங்கள்.
அவர்களிடம் ஆம் ஆத்மி கொண்டு வந்துள்ள நலத்திட்டங்களை எடுத்துச் சொல்லுங்கள். சில கட்சிகள் பெண்களுக்கு பதவி கொடுத்துவிட்டு அதிகாரம் கொடுத்து விட்டதாக தெரிவிக்கின்றன.
ஆனால் உண்மையான அதிகாரத்தை ஆம் ஆத்மி தான் கொடுக்கிறது என சொல்லுங்கள். டெல்லி அரசு அனைத்து பெண்களுக்கும் ரூ. 1000 கொடுக்கும் இந்த திட்டம் உலகில் பெண்களை அதிகாரமாக மாற்றும் மிகப்பெரிய திட்டமாக அமையும் என தெரிவித்துள்ளார்.
English Summary
Kejriwal appeals women voters