இரயிலில் இருந்து திடீரென ஆற்றுக்குள் குதித்து, இறுதி முடிவை தேடிய இளம்பெண்.. அரங்கேறிய சோகம்.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் இருந்து சிவமொக்காவிற்கு நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில், ஜன சதாப்தி இரயில் புறப்பட்டு சென்றது. இந்த இரயில் இரவு 10 மணியளவில் சிவமொக்கா பழைய இரயில் நிலையத்தில் இருந்து புதிய இரயில் நிலையத்திற்கு சென்ற நிலையில், அங்குள்ள துங்கா ஆற்றின் பாலத்தில் சென்று கொண்டு இருந்துள்ளது. 

இதன்போது தீடீரென இளம்பெண் ஒருவர் ஆற்றில் குதிக்கவே, இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் இரயிலை நிறுத்த முயற்சித்துள்ளனர். ஆனால், அதற்குள் பெலகாவி நகர இரயில் நிலையம் வந்துடவே, இரயில்வே காவல் துறையினருக்கு தகவலை தெரியப்படுத்தியுள்ளனர். 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் விரைந்து சென்று, சுமார் 18 மணிநேர போராட்டத்திற்கு பின்னர் பெண்ணின் உடலை மீட்டுள்ளனர். பின்னர் இது குறித்த விசாரணையில், பெங்களூரை சார்ந்த சஹானா (வயது 24) என்பதும், இவர் ஆடிட்டர் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த நிலையில், தேர்வுக்காக சிவமொக்கா வந்ததும் தெரியவந்துள்ளது. இவரது தற்கொலைக்கான காரணம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Shivamogga girl suicide running train jump River


கருத்துக் கணிப்பு

கிரிஜா வைத்தியநாதன் நியமனம் தொடர்பாக நீதிமன்றத்தின் கருத்துAdvertisement

கருத்துக் கணிப்பு

கிரிஜா வைத்தியநாதன் நியமனம் தொடர்பாக நீதிமன்றத்தின் கருத்து
Seithipunal