#BigBreaking | கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா! நாளை மறுநாள் பதிவியேற்பு!  - Seithipunal
Seithipunal


கர்நாடக முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சர் ஆக டி கே சிவக்குமாரும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். 

வருகின்ற இருபதாம் தேதி பதவியேற்பு விழா நடைபெற உள்ளதாகவும், நாடாளுமன்ற தேர்தல் நிறைவடையும் வரை டி கே சிவக்குமார் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக நீடிப்பார் என்றும், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே சி வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

கடந்த 5 நாட்களாக கர்நாடக மாநில முதல்வர் என்ற போட்டி இன்று முடிவுக்கு வந்துள்ளது. நாளை மறுநாள் நடைபெற உள்ள பதவி ஏற்பு விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

நடந்துமுடிந்த இந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றியதில் முதலிடம் டி கே சிவகுமார் தான். 

அவர் தான் முதலமைச்சராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் மேலிடம் சித்தராமையாவை தேர்வு செய்துள்ளது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka New CM Announce Congress may 2023


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->