மாவட்ட ஆட்சியரின் நெகிழ்ச்சி செயலால், வியந்துபோன மக்கள்...! - Seithipunal
Seithipunal


தனது காரின் டயர் பஞ்சர் ஆனதால், அந்த டயரை கழற்றி மாட்டிய மாவட்ட ஆட்சியர் தொடர்பான காணொளி காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர் மாவட்டத்தின் ஆட்சியராக பணியாற்றிய ஒருவர் ரோஹினி சிந்தூரி. இவர் மக்கள் பணியில் நேர்மையாக செயல்படுபவர் என்று பெயர் எடுத்த நிலையில், அதிரடியாகவும் நடவடிக்கை எடுத்து மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளார். 

பல முக்கிய அரசியல்வாதிகள் தலையீடு இருந்தாலும் அவரை நெருங்க முடியாது என்றும், ஏழ்மையானவர்களுக்கு தேவையான உதவியை தேடி செய்வார் என்றும் உள்ளூர் மக்கள் பாராட்டுக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், அரசாங்க வாகனத்தை தனது சொந்த பயணங்களுக்கு பயன்படுத்துவதில்லை என்றும் கூறப்படுகிறது. 

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் ரோகினி விடுமுறை நாளில் மாலுக்கு சாதாரணமாக சென்றுள்ளார். இதன்போது, ரோகிணி தனக்கு சொந்தமான காரை ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில், எதிர்பாராத விதமாக கார் டயர் பஞ்சராகியுள்ளது. 

இதனையடுத்து, காரில் இருந்த மாற்று டயரை எடுத்து அவரே மாட்டிக்கொண்டு இருந்த வேளையில், இதனைக்கண்ட நபர் அவர் மாவட்ட ஆட்சியர் ரோகினி சிந்தூரி என்பதை உறுதி செய்து அவரிடம் நீங்கள் மாவட்ட ஆட்சியர் தானே? என்று கேட்கிறார். 

அவரும் புன்முறுவலுடன் ஆமாம் என்று கூறவே, இது தொடர்பான வீடியோ காட்சியை பதிவு செய்தவர் இணையத்தில் பதிவு செய்துள்ளார். இது அம்மாவட்ட மக்களிடையே மட்டுமல்லாது, அம்மாநில மக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Karnataka Mysore Collector Rohini Sindhuri Change Car Tire Self work Video Trending


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->