பழங்குடி மேம்பாட்டு வால்மீகி நிதியில் ரூ. 89 கோடி முறைகேடு; பதவி விலகிய கர்நாடகா அமைச்சர்; ''நான் எந்தத் தவறும் செய்யவில்லை.'' என கண்ணீர்..!
Karnataka minister resigns over Rs 89 crore fraud in tribal development Valmiki fund
கர்நாடக மகரிஷி வால்மீகி பட்டியல் பழங்குடியினர் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ. 89 கோடி முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த குறைகேடுகு எதிர்ப்பு தெரிவித்து ராய்ச்சூரிலிருந்து பெல்லாரி வரை பாஜக 10 நாள் பாதயாத்திரை மேற்கொள்ளவிருக்கும் நிலையில், கர்நாடக அமைச்சர் பி. நாகேந்திரா வெள்ளிக்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
திட்டமிடல் மற்றும் புள்ளியியல் துறையைக் கையாண்டு வந்த நாகேந்திரா, பாஜகவின் குற்றச்சாட்டுகளை நிராகரித்ததுடன், வால்மீகி முறைகேடு விவகாரத்தில் தனக்கு எந்தப் பங்கும் இல்லை என்றும் மறுத்துள்ளார்.
அத்துடன், தான் கட்சியின் மேலிடத் தலைவர்களைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்ததாகவும் தெரிவித்துள்ளார். "நான் தானாக முன்வந்து ராஜினாமா செய்கிறேன். நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று எனது முதலமைச்சரும் நம்புகிறார். வளர்ச்சிப் பணிகளுக்கோ அல்லது முதலமைச்சரின் தொலைநோக்குப் பார்வைக்கோ எந்தத் தடையும் ஏற்படக்கூடாது. பாஜக என்னை ஒரு குற்றவாளியாகச் சித்தரிப்பதன் மூலம், ஒரு நிரபராதியைக் குற்றவாளியாக்கியுள்ளது" என்று அவர் கூறியுள்ளார்.

நாகேந்திரா அரசாங்கப் பதவியிலிருந்து விலகுவது இது இரண்டாவது முறையாகும். கர்நாடகப் பழங்குடியினர் நல வாரியத்துடன் தொடர்புடைய ரூ. 94 கோடி நிதி முறைகேடு விவகாரத்தில் இவரது பெயர் அடிபட்டதைத் தொடர்ந்து, 2024-ஆம் ஆண்டில் சித்தராமையா அமைச்சரவையிலிருந்து பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக இருந்த இவர் ஏற்கனவே விலகியிருந்தார்.
"எஸ்.ஐ.டி (SIT) மற்றும் சி.ஐ.டி (CID) விசாரணைகள் நடத்தப்பட்டன. ஆனால் ஒரு சதியின் மூலம், சி.பி.ஐ (CBI) மற்றும் அமலாக்கத் துறை (ED) விசாரணைகளைக் கொண்டுவந்து என்னைக் கைது செய்தனர். நான் மூன்று மாதங்கள் சிறைவாசம் அனுபவித்துவிட்டுத் திரும்பினேன். இரண்டாவது குற்றப்பத்திரிகையிலும் தேவையற்ற முறையில் என் பெயரைச் சேர்த்துள்ளனர்" என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.
வால்மீகி ஊழல் விவகாரம் தொடர்பாக நாகேந்திரா பதவி விலகக் கோரி, செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் ராய்ச்சூரிலிருந்து பல்லாரி வரை 170 கி.மீ. தூரத்திற்குப் பாதயாத்திரை மேற்கொள்ளவிருப்பதாக பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சியான ஜனதா தளம் (எஸ்)-ம் அறிவித்துள்ளன.
English Summary
Karnataka minister resigns over Rs 89 crore fraud in tribal development Valmiki fund