சொந்த தாயை கற்பழித்து கொலை செய்த கொடூரம்.. ஆசைக்கு இணங்க மறுத்ததால் அரங்கேறிய வெறிச்செயல்.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாவேரி மாவட்டம் சிக்காவி அருகேயுள்ள வனஹள்ளி கிராமத்தை சார்ந்தவர் பெண்மணி பாரவ்வா (வயது 39). இவரது மகன் சிவப்பா (வயது 21). கடந்த நான்கு நாட்களுக்கு முன்னதாக திடீரென பாரவ்வா மாயமாகியுள்ளார். சிவப்பாவும் வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார். இதனால் குடும்பத்தினர் பெரும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர். 

இந்த நிலையில், நேற்று முன்தினத்தின் போது கங்கிபாவி கிராமத்திற்கு அருகேயுள்ள காட்டுப்பகுதியில் பாரவ்வா பிணமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது உடலில் இருந்த காயத்தை வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதை உறுதி செய்த அப்பகுதி மக்கள், சிக்காவி காவல் துறையினருக்கு தகவலை தெரிவித்துள்ளனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், பாரவ்வாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த சிவப்பாவை கைது செய்து விசாரணை செய்தனர். காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தாயார் பாரவ்வாவை கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். இவரின் மீது சந்தேகம் தீராத காவல் துறையினர், இவரது பேச்சில் உள்ள மழுப்பலை கண்டறிந்துள்ளனர். இந்த சூழ்நிலையில், காவல் துறையினரின் தீவிர விசாரணைக்கு பின்னர் சொந்த தாயை பலாத்காரம் செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

இது குறித்து காவல் துறையினரின் விசாரணையில், " கடந்த 12 ஆம் தேதி சிவப்பா தனது தாயாரை அழைத்துக்கொண்டு, உறவினரின் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்துள்ளார். அப்போது தனது தாயென்றும் பாராமல், காமுக ஆசையால் தனது தாயை ஆசைக்கு இங்க கூறி வற்புறுத்தியுள்ளார். இதனால் அதிர்ச்சிக்கும், ஆத்திரத்திற்கும் உள்ளாகிய பாரவ்வா, தனது மகனை கடுமையாக திட்டியுள்ளார்.

 

இதனை காதுகளில் ஏற்றுக்கொள்ளாத சிவப்பா, தனது தாயை அடித்து துன்புறுத்தி ஆசைக்கு இங்க மீண்டும் வற்பறுத்தியுள்ளார். பின்னர் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சிவப்பா, பாரவ்வாவை அங்குள்ள கங்கிபாவி கிராமத்திற்கு அருகேயுள்ள காட்டிற்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் தாய் இது குறித்து வெளியே சொல்லிவிட்டால் காவல் துறையினர் கைது செய்துவிடுவார்கள் என்று எண்ணி தாயையே கழுத்தை நெரித்து கொலை " செய்தது அம்பலமாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Haveri District 21 Year son Sexual abuse and Murder his own Mother


கருத்துக் கணிப்பு

சசிகலா வருகை அதிமுக-வை பாதிக்குமா?!Advertisement

கருத்துக் கணிப்பு

சசிகலா வருகை அதிமுக-வை பாதிக்குமா?!
Seithipunal