முன்னாள் டி.ஜி.பி பெயரில் போலி மின்னஞ்சல்.. நாகலாந்தை சார்ந்த பெண் உட்பட கும்பல் கைது.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தின் முன்னாள் டி.ஜி.பி சங்கர் பிதரியின் மின்னஞ்சலை ஹேக்கிங் செய்து, அதன் மூலமாக அவரது நண்பர்களிடம் பணம் பறிப்பில் ஈடுபட்ட நாகலாந்தை சார்ந்த பெண் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

கடந்த சில வருடங்களாகவே முகநூல் மற்றும் மின்னஞ்சல் மூலமாக போலியான கணக்குகள் உருவாக்கப்பட்டு, அதிலிருந்து பணம் பறிக்கும் செயல் நடைபெற்று வந்தது. இவ்வாறாக மின்னஞ்சல் உருவாக்கும் நபர்கள் மக்களால் நன்கு அறியப்பட்ட நபர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது. 

இதேபோன்று, கர்நாடக மாநில முன்னாள் டி.ஜி.பி பெயரில் மின்னஞ்சல் உருவாக்கி, அவரது நண்பரிடம் ஒரு கும்பல் மோசடிகள் ஈடுபட்டுள்ளது. கர்நாடக மாநில டி.ஜி.பியாக பணியாற்றி ஓய்வுபெற்ற சங்கர் பிதரி. இவர் வீரப்பன் தேடுதல் பணிக்குழுவின் தலைவராக செயல்பட்டார். 

பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் அரசியலில் ஈடுபட்ட நிலையில், அடிக்கடி கட்சி மாறியதால் பிரபலமடைந்தார். இந்நிலையில், இவரது மின்னஞ்சல் கணக்கை ஹேக் செய்து, அதன் மூலமாக அவசரமாக பணம் தேவைப்படுகிறது, உங்களால் முடிந்த பணத்தை கொடுத்து உதவுங்கள் என்று அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு செய்தி அனுப்பப்பட்டுள்ளது. 

இதனைக்கண்ட அவரது நண்பர்களும் உண்மை என்று நம்பி அதில் பணம் செலுத்திய நிலையில், ஒருவர் சந்தேகம் கொண்டு சங்கருக்கு தொடர்புகொண்டு விசாரித்துள்ளார். இதன் பின்னர் மோசடி மின்னஞ்சல் குறித்த தகவல் வெளியான நிலையில், சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு நாகலாந்து பகுதியை சார்ந்த தியா ரூகா (வயது 37), செரோகா (வயது 27), ஈஸ்டர் கோயாம் (வயது 27) ஆகியோரை கைது செய்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Former DGP Sankar G Mail Hacking and Money Theft Robbery Police Arrest Gang


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal