கர்நாடக அரசியலில் சோகம்: முன்னாள் பேரவைத் தலைவர் காலமானார்!
Karnataka ex Assembly speaker passes away
கர்நாடகா, சட்டப்பேரவை முன்னாள் தலைவர் டி.பி. சந்திரகௌடா (வயது 87) இன்று அவரது வீட்டில் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
கடந்த 1936 ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு நீண்ட அரசியல் அனுபவமும் 3 முறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும், சட்டப்பேரவை உறுப்பினராகவும் பதவி ஆற்றினார்.
மக்களவை உறுப்பினராக காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் சிக்மகளூர் தொகுதியில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி போட்டியிடுவதற்காக தனது பதவியை கடந்த 1978 ஆம் ஆண்டு ராஜினாமா செய்தார்.

இதனை அடுத்து கடந்த 1978 முதல் 1983 ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் சார்பில் சட்ட மேலவை உறுப்பினராக பணியாற்றிய நிலையில் திடீரென ஜனதா தளம் கட்சியில் இணைந்து 1983 முதல் 1985 வரை கர்நாடகா சட்டப்பேரவையில் தலைவராக இருந்தார்.
இவர் மீண்டும் காங்கிரஸில் இணைந்து 1999 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை கர்நாடக மாநிலத்தின் சட்ட அமைச்சராக பொறுப்பு வகித்தார்.
இவர் கர்நாடக மாநில அரசியலில், பல்வேறு கட்சிகளில் வெவ்வேறு காலகட்டங்களில் இணைந்து பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Karnataka ex Assembly speaker passes away