மதுபோதையில் முதலிரவு அறையில் புகுந்த கணவன்.. 3 மாதம் கழித்து வெளியான பகீர் தகவல்..! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் எச்.ஏ.எல் சாஸ்திரி நகர் பகுதியை சார்ந்தவர் பரத். இவர் பொறியாளராக இருந்து வருகிறார். பெண்களரை சார்ந்த தொழில் அதிபரின் மகள் ஸ்ரவாணி. பரத்திற்கும் - ஸ்வராணிக்கும் திருமணம் செய்ய முடிவு செய்து, கடந்த அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. 

திருமணத்தின் போது பெண் வீட்டார் சார்பாக பரத்துக்கு சொகுசு கார், 5 கிலோ தங்க நகைகள், ரூ.5 இலட்சம் வைர மோதிரம் வரதட்சணையாக கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ரூ.3 கோடிக்கும் அதிகமாக வரதட்சணை கொடுக்கப்பட்ட நிலையில், இலட்சணக்கணக்கில் செலவு செய்து ஆடம்பரமாக திருமணம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், திருமணம் முடிந்து முதலிரவுக்காக தம்பதிகள் காத்திருப்பார்கள் என்று எண்ணிய வேளையில், பரத் மது போதையில் தள்ளாடியபடி வந்துள்ளார். 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த புதுமண பெண் ஸ்வராணி, பரத்திடம் விசாரித்துள்ளார். மதுபோதையில் பேச மறுத்த கொடூரன், சிறிது நேரம் கழித்து மனைவியை அடித்து துன்புறுத்த தொடங்கியுள்ளான். வாழ்க்கையை துவங்க காத்திருந்த பெண்மணிக்கு, மதுபோதை கொடூரனால் மனவிரக்தி ஏற்பட்டுள்ளது. 

பின்னர் குடும்பத்தினர் சமாதானப்படுத்தி இருந்த நிலையில், ஒரு மாதம் வீட்டிற்கு வராமலேயே மது போதையில் பரத் சுற்றி திரிந்துள்ளான். இரவு வேளையில் மட்டும் மதுபோதையில் இல்லத்திற்கு வந்த கொடூரன், மனைவியை கடுமையாக தாக்கி கொடுமைப்படுத்தியுள்ளான்.

ஒரு சமயத்திற்கு மேல் கணவனின் கொடூரத்தை தாங்க இயலாமல், தனது தந்தையிடம் விஷயத்தை தெரியப்படுத்தியுள்ளார். மகளின் நிலைகுறித்து அறிந்த தந்தை எச்.ஏ.எல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பரத்தை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும், பரத்துக்கு ஏற்கனவே திருமணம் முடிந்துவிட்டதாகவும், அதனை மறைத்து இரண்டு திருமணம் செய்துள்ளார் என்றும், அவர் பொறியாளர் கிடையாது, எஸ்.எஸ்.எல்.சி தான் பயின்றுள்ளார் என்றும் ஸ்வராணி குற்றம் சுமத்தியுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Bangalore girl Cheated by Husband Drinking Alcohol


கருத்துக் கணிப்பு

சசிகலா வருகை அதிமுக-வை பாதிக்குமா?!Advertisement

கருத்துக் கணிப்பு

சசிகலா வருகை அதிமுக-வை பாதிக்குமா?!
Seithipunal