3 நாள் தீபாவளி கொண்டாட்டம் - ஆனால் 2 மணி நேரம் மட்டுமே அனுமதி - கர்நாடகா அரசு அதிரடி.!!
karnataga government order only 2 hours permission to blast firecrackers for diwali
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற 20-ந் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதிலும் கர்நாடக மாநிலத்தில் தீபாவளி பண்டிகை 20-ந் தேதி தொடங்கி 3 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையின்போது 3 நாட்களிலும் பொதுமக்கள் பட்டாசு வெடித்து பண்டிகையை கொண்டாடுவார்கள்.
இப்படி பட்டாசு வெடிப்பதால், காற்று மாசுபாடு ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளதாவது:-

தீபாவளி பண்டிகை நெருங்கி வருகிறது. இதையொட்டி பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாடுவது வழக்கம். பட்டாசு வெடிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவரும் பின்பற்ற வேண்டும். அந்த தீர்ப்பின்படி, கர்நாடகத்தில் பசுமை பட்டாசுகளை தவிர பிற பட்டாசுகளை விற்பனை செய்யவும், வெடிக்கவும் தடை செய்யப்படுகிறது.
மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உத்தரவின்படி இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும். இந்த நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பட்டாசு வெடிக்க முழுமையாக தடை விதிக்கப்படுகிறது" என்று தெரிவித்தார்.
கடந்த 2018-ம் ஆண்டு முதல் இந்தியாவில் தீபாவளியையொட்டி அதிகளவில் பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு ஏற்பட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும், எனவே தீபாவளியையொட்டி பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடுகளை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
English Summary
karnataga government order only 2 hours permission to blast firecrackers for diwali