கர்நாடகா : தேர்தல் பிரச்சாரத்தில் பணத்தை அள்ளி வீசிய காங்கிரஸ் தலைவர் - வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் 224 தொகுதிகளைக் கொண்ட சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், ஆளும் பாஜக கட்சி ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியிலும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் நோக்கிலும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. இதனால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில், மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாா், மண்டியா மாவட்டம் பேவினஹள்ளி பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அந்த பகுதியில் ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். 

அந்த நேரத்தில், டி.கே.சிவக்குமார் மக்களை நோக்கி பணத்தை அல்லி வீசி எறிந்தார். அந்த பணத்தை மக்கள் போட்டி போட்டு எடுத்து சென்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி அரசியல் கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

karnataga congrass leader threw money in election campaign vedio viral


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->