ஆணுறை விலைகளை 30% உயர்த்த கரெக்ஸ் நிறுவனம் முடிவு..! - Seithipunal
Seithipunal


உலகின் மிகப்பெரிய ஆணுறை தயாரிப்பு நிறுவனமான மலேசியாவைச் சேர்ந்த கரெக்ஸ் நிறுவனம், மூலப்பொருட்களின் தட்டுப்பாடு, விநியோக சங்கிலி பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் ஆணுறைகளின் விலையை சுமார் 30% உயர்த்த முடிவு செய்துள்ளது. 

ஈரான் போர் எதிரொலியாக மூலப்பொருள் பற்றாக்குறை மற்றும் விநியோகச் சங்கிலி இடையூறுகளால் ஏற்படும் அதிகரித்து வரும் அழுத்தத்தைக் காரணம் காட்டி, தனது தயாரிப்புகளின் விலையை 30 சதவீதம் வரை உயர்த்தும் திட்டங்களை  Carex அறிவித்துள்ளது.

ஆண்டுக்கு சுமார் ஐம்பது கோடி ஆணுறைகளை உற்பத்தி செய்யும்  உள்ளீட்டுச் செலவுகளில் ஏற்பட்ட கடும் உயர்வு, உலகளாவிய கப்பல் போக்குவரத்து இடையூறுகள் மற்றும் உயர்ந்த சரக்குக் கட்டணங்கள் ஆகியவை விலை மாற்றத்தைத் தவிர்க்க முடியாததாக ஆக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

காரெக்ஸ் தலைமை நிர்வாகி கோ மியா கியாட்டின் கூற்றுப்படி, இந்த மோதல் ஆணுறை உற்பத்தியில் பயன்படுத்தப்படும் முக்கிய மூலப்பொருட்களின் கிடைப்புத்தன்மை மற்றும் விலையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன் ஈரான் போர் பாதிப்புகள், சரக்கு கட்டண உயர்வு உள்ளிட்ட காரணங்களால் இந்த விலை உயர்வை தவிர்க்க முடியவில்லை என அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது. உலக அளவிலான ஆணுறை உற்பத்தியில் 5ல் ஒரு பங்கை Carex கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Karex decides to raise condom prices


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->