ஜார்க்கண்ட் | முதல்வர் வீட்டில் பலத்த பாதுகாப்பு: நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனியிடம் மத்திய அமலாக்கத்துடைய அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதால் முதல்வர் வீடு மற்றும் அமலாக்க துறையின் வட்டார அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

முதல்வர் மீது எழுந்த நில மோசடி, ஊழல் குற்றச்சாட்டு தொடர்புடைய வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். 

இது குறித்து மூத்த சிறப்பு காவல் கண்காணிப்பாளர் தெரிவித்திருப்பதாவது, அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதால் ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டு மூன்று அடுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

பழங்குடியினரின் போராட்டத்திற்கு மத்தியில் முதல்வர் மீதான விசாரணை நடக்க இருப்பதால் எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jharkhand CM house security 


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->