இராணுவ வீரர்களிடம் சரணடைந்த பயங்கரவாதி.. மகனின் உயிரை பாதுகாத்ததால், தந்தையின் நெகிழ்ச்சி செயல்.! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீரில் நாளுக்கு நாள் பயங்கரவாத தாக்குதல் அதிகரித்து வந்தாலும், சிலர் சரணடையும் சூழலும் இருக்கிறது. இது ஆயிரத்தில் ஒருவர் என நடைபெறும் நிகழ்வாகும். இந்நிலையில், இதனைப்போன்று சரணடைந்த பயங்கரவாதிக்கு இந்திய இராணுவ வீரர்கள் தண்ணீரை வழங்கியுள்ளனர். 

மேலும், மகனின் உயிரை காத்த இராணுவ வீரர்களின் கால்களில் விழுந்து பயங்கரவாதியின் தந்தை கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. இது குறித்த வீடியோவில், " இராணுவத்தினர் முதலில் பயங்கவாதியிடம் ஆயுதத்தை கீழே போட்டு சரணடைய கூறுகின்றனர். 

உனக்கு எந்த தீங்கும் நடக்காது. உன்னை சுற்றிவளைத்துவிட்டோம். பயம் வேண்டாம். துப்பாக்கி சூடு நடத்த மாட்டோம். உங்களின் குடும்பத்தை எண்ணி பாருங்கள். கடவுளை நினைத்து சரணடையுங்கள் என்று கூறுகின்றனர். 

இதனையடுத்து பயங்கரவாதியும் சற்று மனபயத்துடனே வந்தாலும், இதனை உணர்ந்துகொண்ட அதிகாரிகள் அவருக்கு தண்ணீர் வழங்கி ஆசுவாசப்படுத்தினர். பயங்கரவாதியின் தந்தை மகனின் உயிர் பிழைத்த மகிழ்ச்சியில், இராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு காலில் விழுந்து நன்றி தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jammu Kashmir Terrorist Surrender to Indian Army father heartily Thanks


கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
Seithipunal