பயங்கரவாதச் சதி... 360 கிலோ வெடிபொருளுடன் ஜம்மு-காஷ்மீர் மருத்துவர்கள் கைது!
jammu kashmir Dr arrested NIA
ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஹரியானா காவல்துறையினர் இணைந்து நடத்திய கூட்டுச் சோதனையில், கண்ணிவெடித் தயாரிக்கப் பயன்படும் அதிபயங்கர வெடிபொருளான 360 கிலோ அமோனியம் நைட்ரேட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கைப்பற்றல், பயங்கரவாதச் சதித் திட்டம் ஒன்றை முறியடிப்பதில் முக்கியப் பங்காற்றியுள்ளது.
முதற்கட்டமாக, ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் நடத்தப்பட்ட விசாரணையின்போது இந்த வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இது ஆர்டிஎக்ஸ் என்று கருதப்பட்ட நிலையில், பின்னர் அது அம்மோனியம் நைட்ரேட் என ஃபரிதாபாத் காவல்துறை தெளிவுபடுத்தியது.
இந்தச் சம்பவம் தொடர்பாக, காஷ்மீரைச் சேர்ந்த மருத்துவர்களான அதீல் அகமது ராத்தர் மற்றும் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த முஸாமில் ஷகீல் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவர் அதீல் அகமது ராத்தரிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்தே ஃபரிதாபாத் மருத்துவமனையில் சோதனை நடத்தப்பட்டது.
பெரிய பெட்டிகள் மற்றும் பக்கெட்டுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களுடன், கைத்துப்பாக்கிகள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தக் கைது செய்யப்பட்ட இருவரும் நாட்டில் மிகப் பெரிய சதி வேலைகளில் ஈடுபடத் திட்டமிட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இருவரும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் விசாரணையில் வைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, குஜராத்தில் ஐ.எஸ். பயங்கரவாதப் பின்னணி கொண்ட மருத்துவர் உள்பட மூவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
English Summary
jammu kashmir Dr arrested NIA