எஸ்பி வேலுமணி வழக்கில் திருப்பம்: லஞ்ச ஒழிப்பு துறையும் தண்டிக்கப்படுமா? அறப்போர் இயக்கம் பரபரப்பு அறிக்கை! - Seithipunal
Seithipunal


அறப்போர் இயக்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "2018 ஆம் ஆண்டு சென்னை கோவை மாகராட்சி ஊழல் குறித்து முன்னாள் அமைச்சர் வேலுமணி, அதிகாரிகள் மற்றும் சில ஒப்பந்ததாரர்கள் மீது அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தது.

நெடிய சட்ட போராட்டத்திற்கு பிறகு 2021இல் இந்த ஊழல் மீது FIR பதிவு செய்யப்பட்டது. 2023 ஆகஸ்டில் இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு துறை 6 வார காலத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவு இட்டது. ஆனால் இன்று வரை தாக்கல் செய்யப்படவில்லை. இதற்காக 2024 லும் 2025 லும் அறப்போர் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடுத்தது.

2 குற்றப்பத்திரிக்கைகள் தயார் நிலையில் உள்ளது என்றும் முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் சில அதிகாரிகளுக்கு நீதிமன்ற விசாரணை அனுமதி வாங்கி இருந்தாலும் விஜய கார்த்திகேயன் IAS மற்றும் கந்தசாமி IAS ஆகிய இருவருக்கும் இது வரை நீதிமன்ற விசாரணைக்கு அனுமதி வாங்கவில்லை. இவர்களுக்கு மத்திய அரசுதான் அனுமதி வழங்க வேண்டும்.

ஆனால் இவர்கள் நீதிமன்ற விசாரணைக்கு அனுமதி கோரும் கோப்பை மாநில அரசு மத்திய அரசுக்கு 19 மாதங்களாக அனுப்பாமலே வைத்து இருந்தது. அறப்போர் வழக்கு தொடுத்த பிறகு ஆகஸ்ட் 30, 2025 அன்று தான் கோப்பை அனுப்பி உள்ளது. மத்திய அரசு பொழிபெயர்ப்பு செய்யவில்லை என்று 2 நாட்களில் திருப்பி அனுப்பி உள்ளது. மொழிபெயர்ப்பு செய்து நவம்பர் 7 அன்று தான் மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளார்கள்.

எனவே மற்ற அதிகாரிகள் போல இல்லாமல் ஏன் IAS அதிகாரிகளின் கோப்பை 19  மாதங்கள் அனுமதி கோரும் கோப்பை அனுப்பாமலே வைத்து இருந்தீர்கள் என்று சென்னை உயர்நீதிமன்றம் லஞ்ச ஒழிப்பு துறையை மீண்டும் ஒரு முறை விளக்கம் கேட்டு உள்ளது.

முன்னாள் அமைச்சர் வேலுமணி ஊழல் வழக்கில் வேண்டுமென்றே குற்றப்பத்திரிக்கையை கால தாமதம் செய்த தமிழ்நாடு அரசும்,லஞ்ச ஒழிப்பு துறையும் தண்டிக்கப்படுமா என்று பார்ப்போம்" என்று தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK SP Velumani case Chennai HC Arappor Iyakkam


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->