'ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு கூட்டறிக்கையில் ராஜ்நாத் கையெழுத்திடாதது சரித்தான்': மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்..!
Jaishankar says Rajnath was right not to sign SCO summit communique
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்.சி.ஓ.,) ஆலோசனை கூட்டம் சீனா தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்தியா, அதன் முடிவில் வெளியிட இருந்த கூட்டறிக்கையில் கையெழுத்திட மறுப்பு தெரிவித்தது.
இந்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டின் கூட்டறிக்கையில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கையெழுத்திடாதது சரியானது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

எஸ்.சி.ஓ., மாநாட்டில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானை பாதுகாக்க சீனா பாரபட்சமாக நடந்து கொள்கிறது என்று இந்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தன் எதிர்ப்பை தெரிவித்து கூட்டறிக்கையில் கையெழுத்திட மறுப்பு தெரிவித்தார்.
இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளதாவது: முக்கியமான விஷயம் என்பதால், இது குறித்து சில விளக்கம் அளிக்க விரும்புகிறேன். பயங்கரவாதத்தை எதிர்த்து போராடவே எஸ்சிஓ அமைப்பு உருவாக்கப்பட்டது. அதுவே முதன்மையான கொள்கை என்று குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், நீங்கள் யூகிக்கக்கூடிய நாடு, பயங்கரவாதம் குறித்து குறிப்பிடுவதை ஏற்க மறுத்தது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், முக்கியமான குறிப்பு இல்லாத கூட்டு ஆவணத்தை ஆதரிக்க ராஜ்நாத் மறுத்தது சரியானது என்றும், ஒரு மித்த கருத்து அடிப்படையில் மட்டுமே எஸ்சிஓ செயல்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். ஒரு நாடு எதிர்ப்பு தெரிவித்தாலும், எதுவும் அடுத்த கட்டத்திற்கு செல்லாது என்றும், பயங்கரவாதம் குறித்து குறிப்பிடாவிட்டால், நாங்கள் ஆவணத்தில் கையெழுத்திட மாட்டோம் என ராஜ்நாத் தெளிவாக கூறியுள்ளார் என்று ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
English Summary
Jaishankar says Rajnath was right not to sign SCO summit communique