ஆப்பரேஷன் பிகாலி: ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி காஷ்மீரில் சுட்டுக்கொலை..!
Jaish e Mohammed terrorist killed in Kashmir in Operation Bikali
இந்திய பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டதில், ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.
இதனை இந்திய ராணுவம் உறுதி செய்துள்ளது. தொடர்ந்து அந்த பகுதியில் மோதல் நடந்து வருவதாக படையினர் தெரிவித்துள்ளனர். ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த ஒருவனை கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஜம்மு காஷ்மீர் போலீசார் தேடி வந்த நிலையில், அவன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான்.
அவன் பதுங்குமிடம் குறித்து உளவுத்துறையினர் அளித்த தகவல் அடிப்படையில், உதம்பூர் மாவட்டத்தின் வசந்த்கர்க் பகுதியில் இந்திய ராணுவம் மற்றும் போலீசார் இணைந்து ' ஆப்பரேஷன் பிகாலி' மூலம் பயங்கரவாதிகளை தேடும் பணியில் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
English Summary
Jaish e Mohammed terrorist killed in Kashmir in Operation Bikali