பாகிஸ்தானுக்கு வழங்கும் நிதியை இத்தாலி நிறுத்த வேண்டும்: மத்திய நிதியமைச்சர் வலியுறுத்தல்..!
Italy should stop the funding to Pakistan Union Finance Minister insists
பஹல்காமில் கடந்த மாதம் 22-ஆம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடைப்பெற்றதில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த கொடூர தாக்குதலைத் தொடர்ந்து, 'பாகிஸ்தானுக்கான நிதியை இத்தாலி நிறுத்த நிறுத்த வேண்டும்' என இந்தியா வலியுறுத்தியுள்ளது.
பாகிஸ்தான் மீது, பொருளாதார ரீதியில் நெருக்கடி கொடுக்கும் தாக்குதலை மத்திய அரசு தொடங்கியுள்ள நிலையில், அந்த நாட்டில் இருந்து அனைத்து வகை இறக்குமதிக்கும் தடை, பாகிஸ்தான் கொடியுடன் கூடிய கப்பல்களுக்கு அனுமதி மறுப்பு, தபால் மற்றும் பார்சல்களுக்கு அனுமதி இல்லை என, மத்திய அரசு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இந்நிலையில், மே 04-ஆம் தேதி முதல் 07-ஆம் தேதி வரை மிலனில் நடைபெற உள்ள ஆசிய வளர்ச்சி வங்கியின் (ADB) ஆளுநர்கள் குழுவின் 58-வது ஆண்டு கூட்டத்திற்கான நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரத் துறையின் இந்திய அதிகாரிகள் குழுவிற்கு சீதாராமன் தலைமை தாங்குகிறார்.
இதற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இத்தாலி சென்றுள்ளார். அங்கு அவர் இத்தாலியின் பிரதிநிதி ஜியான்கார்லோ ஜியோர்கெட்டிக்யை சந்தித்து பேசியுள்ளார். ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடனான சந்திப்பில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாகிஸ்தானுக்கு வழங்கும் நிதியை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
English Summary
Italy should stop the funding to Pakistan Union Finance Minister insists