சந்திரயான்-4 லேண்டர் தரை இறங்குவதற்கான இடம் அடையாளம் கண்டுள்ளதாக இஸ்ரோ அறிவிப்பு..!
ISRO has announced that the landing site for the Chandrayaan 4 lander has been identified
சந்திரயான் 3 திட்டம் மூலம் சந்திரனில் வெற்றிகரகமாக லேண்டரை இந்தியா தரையிறக்கிறது. இந்த லேண்டர் நிலவின் தென்பகுதியில் இருந்து துல்லியமாக படம்பிடித்த பூமிக்கு அனுப்பியது. இந்த நிலையில் மண் போன்ற மாதிரிகளை எடுத்து வருவதற்கான அடுத்தக் கட்ட பணிகளில் இஸ்ரோ இறங்கியுள்ளது.
இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், இதற்கு சந்திரயான்-4 என பெயரிடப்பட்டுள்ளது. வரும் 2028-க்குள் சந்திரயான்-4 திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ இலக்காக கொண்டு வந்துள்ளது.
இந்த சந்திரயான்-4 மூலம் லேண்டர் சந்திரனுக்கு அனுப்பப்படும் லேண்டர் சந்திரனில் உள்ள மாதிரிகளை சேகரித்து பூமிக்கு அனுப்பும். இது மிகவும் கடினமான ஒன்றாகும்.
இந்நிலையில் சந்திரனின் மேற்பகுதியில் லேண்டர் தரையிறங்குவதற்கான 04 இடங்களை தேர்வு செய்ததாகவும், அதில் ஒரு இடத்தை அடையாளம் கண்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நிலவின் மேற்பகுதியை Mons Mouton என அழைப்பார்கள். இதில் எம்.எம்.-1, எம்.எம்.-3, எம்.எம்.-5 மற்றும் எம்.எம்.-5 ஆகிய நான்கு இடங்களை கண்டறிந்துள்ளோம் என்றும், அதில் எம்.எம்.-4-ஐ தரையிறக்குவதற்கான இடமாக அடையாளம் கண்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
English Summary
ISRO has announced that the landing site for the Chandrayaan 4 lander has been identified