சந்திரயான் 3 விண்கலத்தின் ஆரம்பகட்ட சோதனை வெற்றி.. இஸ்ரோ அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நிலவு பணத்தை ஆய்வு செய்யும் சந்திரயான் 3 விண்கலத்தின் ஆரம்ப கட்ட சோதனை பெங்களூரில் உள்ள இ.ஆர். ராவ் செயற்கைக்கோள் மையத்தில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி முதல் பிப்ரவரி 2ம் தேதி வரை நடைபெற்றதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

மேலும் இந்த சோதனையானது செயற்கைக்கோள்களை செயல்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கள் என இஸ்ரோ கூறியுள்ளது. சந்திரயான் 3 விண்கலம் உந்துவிசை, லேண்டர் மற்றும் ரோவர் என மூன்று தொகுதிகளை கொண்டது

சந்திரயான் 3 விண்கலத்தில் அடுத்தடுத்த தொகுதிகளுக்கு இடையே உள்ள ரேடியோ அலைவரிசை தொடர்பு இணைப்புகளை நிறுவுவதற்கான சிக்கலான பணிகளை மேற்கொள்ள இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

மேலும் சந்திரயான் 2 விண்கலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் இதில் ஏற்படாத வண்ணம் மிக வலிமையானதாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும் விண்கலத்தில் ஒரு கருவி பழுதடைந்தால் மற்றொரு கருவி அந்த பணியை முன்னெடுத்து செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திராயன் 3 விண்கலம் ஜூன் மாதத்தில் விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Isro announced Chandrayaan 3 initial test successful


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->