பெங்களூருவில் நடந்த ஐ.பி.எல். போட்டியின் போது ஐ.பி.எஸ். அதிகாரியின் மகள் மற்றும் மகனுக்கு பாலியல் தொல்லை..! - Seithipunal
Seithipunal


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐ.பி.எல் போட்டி கடந்த 03-ஆம் தேதி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. அப்போது, டையமண்ட் பாக்ஸ் எனப்படும் அதிக வசதி கொண்ட உயரடுக்கு பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்து கிரிக்கெட் போட்டியை ரசித்து கொண்டிருந்தனர்.

அங்கு ஐ.பி.எஸ். அதிகாரியின் மனைவி, மகள் மற்றும் மகன் ஒன்றாக அந்த வரிசையில் அமர்ந்திருந்த போது அங்கு 02 பேர் அவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். மே 3-ந்தேதி இரவு 09.40 மணியளவில் நடந்த சம்பவம் பற்றி ஐ.பி.எஸ். அதிகாரியின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:-

அவருடைய 26 வயது மகள் மற்றும் 22 வயது மகனை அடையாளம் தெரியாத நபர்கள் தகாத இடத்தில் தொட்டும், பாலியல் சீண்டலிலும் ஈடுபட்டனர் என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் போலீசார் கூறுகையில், அதில் ஒருவர் மூத்த வருமான வரி துறை அதிகாரி எனவும் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

IPS officer daughter and son sexually harassed during IPL match in Bengaluru


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->