தெலுங்கானா || கருத்தடை அறுவை சிகிச்சை செய்த 4 பெண்கள் பரிதாப பலி.. விசாரணைக்கு உத்தரவு..! - Seithipunal
Seithipunal


கருத்தை அறுவை சிகிச்சை செய்து கொண்ட 4 பெண்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் இப்ராகிம்பட்டினத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 25ம் தேதி பெண்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை முகாம் நடந்தது. இந்த முகாம் மூலம் , சுமார் 34 பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை நடைபெற்றது. இந்நிலையில், கருத்தை அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்களில் 4 பேர் அடுத்தடுத்து பலியானர்.

இதனால், ஆத்திரமடைந்த அந்த பெண்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுப்பர்ரனர். இந்நிலையில், இந்த சம்பவம்  தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் தலைமையில் விரிவான விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது, மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவியும், ஒரு வீடும் வழங்கப்படும் என்று தெலுங்கானா அரசு தெரிவித்துள்ளது.

இந்த அறுவைசிகிச்சை செய்த மருத்துவமனையின் சூப்பிரண்டு இடைநீக்கம் செய்யப்பட்டதோடு அறுவை சிகிச்சை செய்த மருத்துவரின் உரிமம் பறிக்கப்பட்டு மற்ற பெண்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Investigation about death after sterilisation surgery in telungana


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->