முதல் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு... இந்திய விஞ்ஞானிகள் அசத்தல்.! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றனர். இதற்கான தடுப்பு மருந்து இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. 

உலக ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு 200க்கும் மேற்பட்ட தடுப்பு மருந்துகளை தயாரித்துள்ளனர். அவை பல்வேறு சோதனை நிலையங்களில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதுவரை உலக முழுவதும் கொரோனா வைரசால் 10,402,897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 507,523 பேர் இறந்துள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவின் முதல் தடுப்பூசியை வெற்றிகரமாக உருவாகியுள்ளதாக புனேவை சேர்ந்த தடுப்பூசி தயாரிப்பாளரான பாரத் பயோடெக்  நிறுவனம் அறிவித்துள்ளது. இது இந்திய மருந்து ஆராய்ச்சி கவுன்சில், தேசிய வைராலஜி நிறுவனம் உடன் இணைந்து தயாரித்துள்ளனர். 

"கோவேக்சின்" என அழைக்கப்படும் கொரோனா தடுப்பூசியை, அடுத்த மாதம் நாடு முழுவதும் இரண்டு கட்ட மனித மருத்துவ பரிசோதனை நடத்துவதற்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு கட்டுப்பாட்டாளர் மற்றும் இந்திய மருத்துவ கட்டுப்பாட்டு இயக்குனரின் ஒப்புதலை பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

invention of corona vaccine


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->