சபரிமலை ஐயப்பன் கோயில்; நாளை உடனடி தரிசன முன்பதிவு 5,000ஆக குறைப்பு..!
Instant darshan bookings at Sabarimala Ayyappa temple tomorrow reduced to 5000
கேரளா சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளைய உடனடி தரிசன முன்பதிவு 5,000ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நாளை முதல் உடனடி தரிசன முன்பதிவு 10,000ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்ட நிலையில், நாளை 5,000ஆக குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடங்களை விட, சபரிமலையில் இந்த மண்டல காலத்தில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, தினமும் ஆன்லைன் மூலம் 70 ஆயிரம் பேருக்கும், உடனடி முன்பதிவு மூலம் 20 ஆயிரம் பேருக்கும் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால், உடனடி கவுண்டர்களில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளத்தக்க தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக சபரிமலையில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் உடனடி முன்பதிவு எண்ணிக்கை இன்று வரை 05 ஆயிரமாக குறைக்கப்பட்டது. தொடர்ந்து நாளை முதல் 10,000 ஆயிரமாக அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Instant darshan bookings at Sabarimala Ayyappa temple tomorrow reduced to 5000