எலி கடித்து பச்சிளம் குழந்தை உயிரிழப்பு: சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா, நாகர் கர்னூல் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கு கடந்த 40 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. தாய், குழந்தையை வீட்டில் படுக்க வைத்து விட்டு குளிக்க சென்ற சமயத்தில் வீட்டிலிருந்து எலி ஒன்று குழந்தை அருகில் வந்து திடீரென குழந்தையின் மூக்கை கடித்தது.

இதனால் குழந்தை கத்தி அழுத சத்தம் கேட்டு குழந்தையின் தாய் மற்றும் குடும்பத்தினர் வந்து பார்த்தனர். அப்போது குழந்தையின் மூக்கில் இருந்து ரத்தம் நிற்காமல் வந்ததால் உடனடியாக குழந்தையை ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். 

அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்த விட்டது. 

எலி கடித்து குழந்தை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சுகாதாரத் துறை அதிகாரிகள், எலி இருக்கும் வீடுகளில் குழந்தைகளை தரையில் படுக்க வைக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

infant dies due to rat bite


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->