''கட்டண ரத்து'': இண்டிகோ விமான பயணிகளுக்கு குட் நியூஸ்! - Seithipunal
Seithipunal


இண்டிகோ நிறுவனம், பயணிகளுக்கு விதிக்கப்படும் எரிபொருள் கட்டணத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் இண்டிகோ நிறுவனம் விமான எரிபொருள் விலை ஏற்றம் காரணமாக எரிபொருள் கட்டணத்தை அறிமுகப்படுத்தியது. 

அதன்படி குறைந்தபட்சமாக 500 கிலோ மீட்டர் பயணம் செய்பவர்களுக்கு ரூ. 300 மற்றும் அதிகபட்சமாக 3501 கிலோ மீட்டருக்கு மேல் பயணிப்பவர்களுக்கு ரூ. 1000 எரிபொருள் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. 

இந்நிலையில் மத்திய அரசு மூன்றாவது முறையாக விமான எரிபொருள் விலையை குறைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து இண்டிகோ நிறுவனம் பயணிகளுக்கு விதிக்கப்பட்டு வந்த எரிபொருள் கட்டணத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. 

இந்த எரிபொருள் கட்டண ரத்து நடைமுறை, சர்வதேச விமானம் மற்றும் உள்நாட்டு விமான சேவைகளில் உடனடியாக அமலுக்கு வரும் எனவும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Indigo flights fare reduction


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->