உக்ரைனிலிருந்து வெளியேறிய இந்திய மாணவர்கள் ரஷ்யாவில் படிப்பை தொடரலாம்.! ரஷிய தூதர்.! - Seithipunal
Seithipunal


உக்ரைனில் இருந்து வெளியேறிய இந்திய மாணவர்கள் ரஷ்யாவில் படிப்பை தொடரலாம் என்று ரஷிய தூதர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கும் இடையேயான போர் தொடர்ந்து நூறு நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இதனால் இரு நாட்டு மக்கள், இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாத சூழ்நிலையில் தள்ளப்பட்டுள்ளனர்.

 இதையடுத்து பல்வேறு நாடுகளில் இருந்து உக்ரைனில் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு விதமான படிப்புகளை படித்து வந்த மாணவர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.

இந்நிலையில் போர் காரணமாக உக்ரைனில் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி படித்து வந்த இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.

மேலும் போர் முடிவடையாததால் அவர்கள் மீண்டும் நேரடி படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் படிப்பை பாதியில் விட்டு வெளியேறிய மாணவர்கள் முந்தைய கல்வி ஆண்டுகளை இழக்காமல், ரஷிய பல்கலைக் கழகங்களில் சேர்க்கை வழங்கப்படும் என்றும், இதன் மூலம் கல்வியை விட்ட இடத்திலிருந்து அந்தந்த படிப்புகளை மாணவர்கள் தொடரலாம் என்று ரஷிய தூதரக துணைத் தலைவர் ரோமன் பாபுஷ்கின் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian students continue studies in russia


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->