கனடா நாட்டவருக்கு இனி விசா கிடையாது! இந்திய அரசின் அடுத்த அதிரடி! - Seithipunal
Seithipunal


கனடா நாட்டில் கடந்த ஜூன் 19ஆம் தேதி நிஜ்ஜர் என்ற காலிஸ்தான் தீவிரவாதி கொல்லப்பட்டார். இந்தியாவின் உழுவமைப்புக்கு இந்த படுகொலைக்கும் இந்திய அரசின் ஏஜெண்டுகளுக்கும் தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டில் இருந்தார். இதனால் இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே இருந்த நட்பு உறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில் இந்திய வெளிவுருவுத்துறை அதிகாரி ஒருவரை கனடா அரசு வெளியேற்றியது.

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக டெல்லியில் உள்ள கனடா தூதராக அதிகாரி ஒருவரை நாட்டை விட்டு வெளியேறும்படி உத்தரவிட்டு இந்தியா பதிலடி கொடுத்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ளது

இந்த நிலையில் கனடா நாட்டு குடிமக்களுக்கான விசா சேவையை சஸ்பெண்ட் செய்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. காலிஸ்தான் விவகாரம் தொடர்பாக இரு நாடுகள் இடையே கருத்து மோதல் நிலவி ஒரு நிலையில் கனடா நாட்டவருக்கு இத்தகைய தடை விதிக்கப்பட்டுள்ளது

பரபரப்பான இந்த சூழலில் கனடாவில் இன்று காலிஸ்தான் தீவிரவாதி சுக்தூல் சிங் சுட்டுக்கொலை படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் கனடா முழுவதும் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. கனடாவில் உள்ள இந்தியர்கள் மற்றும் இந்திய மாணவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய அரசு ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian Govt has suspended visa for Canada citizens


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->