நேபாளத்தில் வெள்ள அனர்த்தத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ள 21 தமிழர்களை சந்தித்த இந்தியத் தூதர்; இன்னும் 85 தமிழர்களை தொடர்பு கொள்ளமுடியாத நிலை..!
Indian Ambassador meets 21 Tamils rescued from flood disaster in Nepal
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 500-ஐ கடந்துள்ளதாக நேபாள அரசின் அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறைச் சரிவு (Glacial collapse) காரணமாக இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளகாக அமெரிக்கை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சற்றும் எதிர்பாராத இந்த கோர விபத்தில் இந்தியர்கள் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உட்பட 1,000-க்கும் மேற்பட்டோர் மயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வெள்ள அநர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியுள்ள இந்தியர்களைக் கண்டறியவும், அவர்களைப் பாதுகாப்பாக மீட்கவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட 21 தமிழர்களை இந்தியத் தூதர் நவீன் ஸ்ரீவஸ்தவா சந்தித்துள்ளார். காத்மாண்டு அழைத்து வரப்பட்டவர்களை வசதிகள் குறித்து அவர் கேட்டறிந்துள்ளார்.
நேபாள பெருவெள்ளத்தில் சிக்கிய 106 தமிழர்களில் 21 பேர் மட்டுமே இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். நேபாளில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் ஆன்மீக சுற்றுலாவிற்காக சென்றவர்களில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கப்பட்டு முகாமில் தங்க வைத்துள்ளதாக நேபாள அரசு தெரிவித்தது.
இதனையடுத்து இந்திய தூதர் நேரில் சென்று அவர்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை பற்றி கேட்டறிந்துள்ளார். அத்துடன், இந்தியாவில் இருந்து மீட்பு மற்றும் உதவி பொருட்களை இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானத்தில் அனுப்பட்ட நிலையில் தற்போது மீட்பு பணியில் உதவிகளையும் இந்திய வழங்கி வருகிறது.

இந்நிலையில், இன்று மாலை அல்லது நாளை காலைக்குள் மீட்கப்பட்டவர்கள் டெல்லிக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது. அதற்காக இந்தியாவின் சி 70 குளோபல் மாஸ்டர் விமானம் அவர்களை அங்கிருந்து இந்திய அழைத்து வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், 48 மணி நேரம் கடந்தும் 85 தமிழர்களைத் தொடர்புகொள்ள முடியாத நிலை நீடிக்கிறது.
அதேநேரம், நேபாளத்தை ஒட்டிய திபெத் பகுதியில் அணை ஒன்று உடைந்துவிட்டதாக வெளியான தகவலை அடுத்து, மீண்டும் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளதாக நேபாள காவல்துறை எச்சரித்துள்ளது.
English Summary
Indian Ambassador meets 21 Tamils rescued from flood disaster in Nepal